தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் அருகே மரக்கடையில் திடீரென பற்றிய தீ! - Fire near Chidambaram

சிதம்பரத்தில் மரம் இழைப்பகம் கடை ஒன்றில் திடீரென தீப்பிடித்தால் சுமார் 40 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

மரக்கடையில் திடீரென பற்றிய தீ
மரக்கடையில் திடீரென பற்றிய தீ

By

Published : Mar 29, 2021, 12:34 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மந்தக்கரை பகுதியில் சக்கரபாணி, ராமு ஆகியோருக்கு சொந்தமான மாரியப்பன் மரம் இழைப்பகம் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 29) இரவு வேலையை முடிந்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டனர்.

பின்னர் இரவு 11 மணி அளவில் மரம் இழைப்பகமானது திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் கடையில் மரவேலைப்பாடுகளுக்காக வைத்திருந்த கட்டிங் மெஷின், மரத்தை வடிவமைக்கும் டிசைனிங் மெஷின் உள்பட ரூ.40 லட்சம் மதிப்புள்ள மெஷின்கள் மற்றும் மர சாமான்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.

மரக்கடையில் திடீரென பற்றிய தீ

இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details