தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முந்திரி எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் திடீர் தீ விபத்து! - விபத்துச் செய்திகள்

கடலூர்: பண்ருட்டி அருகே தனியார் முந்திரி எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து
ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

By

Published : Feb 19, 2021, 3:43 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேவுள்ள காடாம்புலியூரில் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான ‘குமாரசாமி இண்டஸ்ரிஸ்’ என்னும் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில், முந்திரிகொட்டையில் இருந்து பிரிக்கப்படும் தோலை பதப்படுத்தி, அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (பிப்.19) முந்திரி எண்ணெய் சுத்திகரிக்கப்படும்போது எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது. முதல் தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென்று கட்டடம் முழுவதும் பரவத் தொடங்கியது.

இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோபி அருகே தீ விபத்து : ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

ABOUT THE AUTHOR

...view details