சூடான் நாட்டின் தலைநகரான கார்டூமில் உள்ள செராமிக் ஆலையில் நேற்று சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆலையில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.
சூடான் தீ விபத்து; கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனு...
கடலூர்: சூடான் நாட்டின் செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவரின் மனைவி மனு அளித்துள்ளார்.
sudan fire accident
இந்நிலையில், இந்த விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. ஏழு இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அதில் நால்வர் மோசமான நிலையில் உள்ளதாகவும் இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: சூடான் தீ விபத்து - 18 இந்தியர்கள் உயிரிழப்பு!