விருத்தாசலம் அருகே நந்தீமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்துவருகின்றனர். இந்தப் பள்ளிக் கட்டடம் ஜனவரி மாதத்தில் இடிக்கப்பட்டு புதிதாக கட்டடம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதுநாள் வரை கட்டடம் கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்திவரப்பட்டுள்ளது.
பள்ளிக் கட்டடம் இல்லாததால் கோயிலில் பாடம் பயிலும் மாணவர்கள்!
கடலூர்: பள்ளிக் கட்டடம் இல்லாததால் மாணவர்கள் கோயிலில் பாடம் பயிலும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Temple
இந்நிலையில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிக்கூடம் திறந்து பள்ளிக்குழந்தைகளுக்கு அமர்ந்து படிக்க இடம் இல்லாமல் அருகில் உள்ள கோயிலில் அமர்ந்து பயின்றுவருகின்றனர். பள்ளிக் கட்டடத்தை உடனே கட்டிமுடித்து தருமாறு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். பள்ளிக் கட்டடம் இல்லாமல் மாணவர்கள் கோயிலில் பயின்றுவருவது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.