தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கி தராததால் சிறுவன் தற்கொலை - Cuddalore district

கடலூர்: பண்ருட்டி அருகே சிறுவன் ஒருவன் ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

student commits suicide
student commits suicide

By

Published : Aug 1, 2020, 4:03 AM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் விக்னேஷ் (14). இவர் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பள்ளிகளை மூடியுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் பள்ளிகளில் ஆன்லைன் மூலமும் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. எனவே ஆன்லைனில் படிப்பதற்காக செல்போன் வாங்கித் தருமாறு விக்னேஷ் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜயகுமார் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும், முந்திரி கொட்டைகளை விற்று செல்போன் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து காடம்புலியூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் விக்னேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details