தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்டவர்கள் ஓமன் தலைநகர் மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்துவந்தனர்.
தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதியுறுகின்றனர்.
ஓமனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு தொழிலாளர்கள் இதனால் அவர்கள் அனைவரும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தங்களை சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர்கள் அனைவரும் காணொலி வாயிலாக தமிழ்நாடு அரசு தங்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:வெளிநாடுகளில் தவித்த 873 இந்தியர்கள்: சிறப்பு விமானம் மூலம் மீட்பு!