தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றம்! - Silver Beech

கடலூர்: சில்வர் பீச்சில் கடல் சீற்றமும் காற்றின் வேகமும் அதிகமாகக் காணப்படுவதால் கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.

cuddalore

By

Published : Aug 6, 2019, 5:41 PM IST

கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் உள்ளது. இங்கு வழக்கத்தைவிட இன்று கடல் சீற்றமாகக் காணப்பட்டது. இதன் காரணமாக கடலில் பெரிய ராட்சச அலைகள் எழும்பியதோடு, கடற்கரை ஓரமாக மணலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் பகுதியில் ஏற்கனவே கடலோர காவல்படை, தேவனாம்பட்டினம் காவல் துறையினர் பொதுமக்கள் குளிக்கத் தடைவிதித்துள்ளனர். மேலும், பொதுமக்களை கடல் அருகே அனுமதிக்கவில்லை.

சில்வர் பீச்சில் கடல் சீற்றம்

கடலூர், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலையாளர் விஜயன் தெரிவித்திருந்தார்.

கடலுார் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1
மேலும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் சில்வர் பீச்சில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதாலும் கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details