தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்டியில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி கூலி தொழிலாளி மரணம் - வேட்டியில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி கூலி தொழிலாளி மரணம்

கடலூரில் கூலி தொழிலாளி தனது வேட்டியில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலி தொழிலாளி மரணம்
கூலி தொழிலாளி மரணம்

By

Published : Mar 12, 2022, 7:27 PM IST

கடலூர்: கடலூர் மாவட்டம் சான்றோர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (28). இவர் நேற்று (மார்ச் 11) அவருடைய நண்பர் ஒருவரின் இறப்புக்கு சென்று வந்துள்ளார்.

பின்னர், நேற்று மாலை நண்பரின் இழப்பை தாங்க முடியாமல் மது குடித்துவிட்டு இரண்டு மதுபாட்டில்களை தனது வேட்டியில் வைத்துகொண்டு சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். குடிபோதையில் வந்த அவர், வேகத்தடையின் மீது ஏறும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது அவரின் இடுப்பில் வைத்திருந்த இரண்டு மதுபாட்டில்கள் உடைந்து, அவரது வயிற்றிலேயே குத்தி ரத்தம் வெளியேறியுள்ளது.

அந்த வழியாக வந்த சிலர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் முன்னரே ரத்தம் அதிக அளவில் வெளியேறிய காரணத்தினால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, அவரது உடல் உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து முதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் - இதுதான் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details