சென்னை :மூச்சு திணறல் காரணமாக, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜயகாந்த், விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்தவகையில், திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் தேமுதிக தொண்டர்கள் இன்று (டிச. 1) கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி, கடலூர் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சிவக்கொழுந்து தலைமையில் திருவதிகையில் உள்ள புகழ்பெற்ற வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆயுள் ஹோமம் நடத்தப்பட்டு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதேபோல், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டி பண்ருட்டியில் அக்கட்சியின் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.