இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது, "திறந்த வெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் 70 விழுக்காடு மானியம் வழங்குகிறது. மானிய உதவி, சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்பு செட் 5 ஹெச்.பி (ஹார்ஸ் பவர்) முதல் 10 ஹெச்.பி வரை 70 விழுக்காடு மானியத்தில் அமைத்து தரப்படும்.
மோட்டார் பம்பு செட் அமைக்க செலவாகும் மொத்த தொகையில் 30 விழுக்காடு தொகை மத்திய அரசின் பங்களிப்பாகவும் 40 விழுக்காடு தொகை மாநில அரசின் பங்களிப்பாகவும் 30 விழுக்காடு தொகை விவசாயிகளின் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படவுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டில் 140 எண்கள் சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்பு செட் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது.
மேலும் கடலூரில் 45, விருத்தாசலத்தில் 55, சிதம்பரம் 50 என்ற எண்ணிக்கையில் உபகோட்டங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் தொடர்புக்கு: மேற்கண்ட அரசு மானியத்துடன் சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்பு செட் அமைப்பதற்கு அனைத்து விவசாயிகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.