தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் வீட்டின் ஏசியில் புகுந்த சாரைப் பாம்பு! - கடுமையான வெப்பம் காரணமாக

கடலூரில் கடுமையான வெப்பம் காரணமாக பல வகையான பாம்புகள் வீட்டில் உள்ளே புகுந்து கொள்கிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கடலூரில் வீட்டின் ஏசியில் புகுந்த சாரை பாம்பு!
கடலூரில் வீட்டின் ஏசியில் புகுந்த சாரை பாம்பு!

By

Published : May 17, 2022, 5:00 PM IST

கடலூர்சாமிபிள்ளை நகரில் உள்ள ஜான் ஆண்டனி என்பவரது வீட்டில் உள்ள ஏசியில் பாம்பு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, கடலூர் பாம்பு பிடி வீரரான செல்லத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். வீட்டிற்குச் சென்ற செல்லம், ஏசியில் உள்ளே புகுந்திருந்த சாரைப் பாம்பை பாதுகாப்பாக பிடிக்க முயன்றார். ஆனால், இறந்த நிலையில் தான் பாம்பு மீட்கப்பட்டது.

வெயில் காலங்களில் இதுபோல் பாம்புகள் வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டிகளைத் தேடி வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமென பாம்பு பிடி வீரர் செல்லம், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கடலூரில் வீட்டின் ஏசியில் புகுந்த சாரை பாம்பு!

ABOUT THE AUTHOR

...view details