தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தை அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம்..! - Silver Beach Amavasai Darpanam

கடலூர்: தை அமாவாசையை முன்னிட்டு கடலூர் வெள்ளி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட்டது.

கடலூர் தை அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் வெள்ளி கடற்கரை தை அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர்ப்பணம் Cuddalore Amavasai Darpanam Silver Beach Amavasai Darpanam Amavasai Darpanam
Silver Beach Amavasai Darpanam

By

Published : Jan 24, 2020, 9:01 PM IST

தை அமாவாசை நாளில் வீட்டில் இறந்தவர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுப்பார்கள். அப்படி கொடுத்தால் அவர்களின் அருள் கிடைக்கும். அதனால் வீட்டில் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். அதன்படி, தை அமாவாசை நாளான இன்று வீட்டில் இறந்த முன்னோரின் நினைவாக கடலூர் வெள்ளி கடற்கரையில் அவருடைய குடும்பத்தார்கள் நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு படையல் வைத்து திதி அளித்து வழிபட்டனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் குடும்பத்தினர்

இங்கு கடலூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திதி கொடுப்பதற்காக குவிந்திருந்தனர். இதனால், கடலூர் வெள்ளி கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details