வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஃபோனி புயலாக உருவாகியது. இந்தப் புயலானது கடலூர்- சென்னைக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒடிசாவை நோக்கி நகர்ந்து விட்டதாகவும், நாளை கரையைக் கடக்கவுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் கடற்கரையில் மண்ணரிப்பு - மீனவர்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை! - மண்ணரிப்பு
கடலூர்: கடல் சீற்றம் காரணமாக கடலூர் வெள்ளி கடற்கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
![கடலூர் கடற்கரையில் மண்ணரிப்பு - மீனவர்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3169697-thumbnail-3x2-beach.jpg)
வெள்ளி கடற்கரையில் மண்ணரிப்பு
கடலூர் வெள்ளி கடற்கரையில் மண்ணரிப்பு
மேலும், இப்புயலின் தாக்கத்தால் கடலூரில் கடல்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, இன்று வெள்ளி(சில்வர்) கடற்கரை பகுதியில் ஏற்பட்ட ராட்சத அலைகளால் மண்ணரிப்பு ஏற்பட்டு கடல்நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதால், மீனவர்கள் அசத்தில் உள்ளனர். அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை தினம் என்பதால், பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.