தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்க போராட்டம்! - கடலூர்

கடலூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்க போராட்டம் நடத்தப்பட்டது

signature protest

By

Published : Jul 26, 2019, 10:53 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அண்ணா பாலம் அருகில் மக்களிடையே கையெழுத்து இயக்கப் போராட்டம் நடத்தினர்.

இப்போரட்டத்தின் போது "புதிய கல்விக் கொள்கை மாநில அரசின் கல்வி உரிமையை பறிக்கிறது. இக்கல்விக் கொள்கையின் மூலம் மத்திய அரசு கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கிறது,ஏழை மாணவர்களும் பெண்குழந்தைகளும் கல்விகற்க முடியாத சூழ்நிலையை இந்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கும்" என்று மக்களிடையே பரப்புரை மேற்கொண்டனர் .

கையெழுத்து இயக்கப் போராட்டம்

மேலும் தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரானது, இதனால் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், எனவே உடனடியாக புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details