தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்! - Signal 1 cyclone warning in Cuddalore

கடலூர்: கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

cuddalore

By

Published : Nov 5, 2019, 5:12 PM IST

Updated : Nov 5, 2019, 5:45 PM IST

தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கு வடக்கே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்தத் தாழ்வு நிலை, சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கவுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை ஏற்றுமாறு இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது.

கடலூரில் உள்ள புயல் எச்சரிக்கை கூண்டு

அதன்படி, இன்று பிற்பகல் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இதையும் வாசிங்க : கடலூர்: பட்டப்பகலில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை பணம் திருட்டு !

Last Updated : Nov 5, 2019, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details