விருத்தாசலத்தில் ஷரீஅத் விழிப்புணர்வு மாநாடு - Shariat awareness meeting
கடலூர்: விருத்தாசலத்தில் ஷரீஅத் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
கடலூர் மாவட்ட விருதாச்சலத்தில், ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் விருத்தாசலம் ஆலடி ரோடு நவாப் ஜாமி மஸ்ஜித்தில் ஷரீஅத் என்றழைக்கப்படும் இஸ்லாமிய சட்டம் குறித்த விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஜமா அத்துல் அலமா சபை தலைவர் சபியுல்லாஹ், காட்டுமன்னார்குடி வட்டார தலைவர் முஹம்மது அஹ்மது ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், பத்தாண்டுகளுக்கு மேல் விசாரணை கைதியாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும், புல்வாமா தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்தும் வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.