Sexual harassment: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஏகே குச்சிபாளையத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி நேற்று முன்தினம் (ஜனவரி 12) காலை, பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் கை, கால்கள் முறிவுற்று படுகாயமடைந்த மாணவி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார்.