தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டன் கணக்கில் பான்பராக், குட்கா பறிமுதல் - போலீசார் விசாரணை - cuddalore district news

கடலூர்: கே.என். பேட்டையில் வீடு முழுவதும் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன.

kutka
kutka

By

Published : Aug 14, 2020, 3:54 PM IST

கடலூர் மாவட்டம் கே.என். பேட்டை அருகே தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி உள்ளிட்ட காவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள மகேஸ்வரி என்பவரின் வீட்டில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போதை பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இந்த போதை பொருள் எங்கிருந்து வந்தது. இதில் யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்களின் மதிப்பு பல கோடி இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details