தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சீமானின் கருத்தை ஏற்க முடியாது" - பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி - Pon Radhakrishnan hope built ramar temple in ayodhi

கடலூர்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும், ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சீமானின் கருத்தை ஏற்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

By

Published : Oct 17, 2019, 6:22 PM IST

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் மாதம் முழுவதும் பாஜக சார்பில் அக்கட்சியின் தொண்டர்களுக்கு 150 கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று கடலூர் மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பாதயாத்திரை மூலம் காந்தியின் கொள்கைகளான மதுவிலக்கு, சுதேசி பொருட்கள் தயாரித்தல், பெண்களுக்கு முழு உரிமை வழங்குதல், தூய்மையான இந்தியா படைத்தல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்" என்றார்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

மேலும், அயோத்தி வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக அமையும். ராமர் கோவில் கட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கொலையை நியாயப்படுத்தி சீமான் பேசியது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை வழக்கு கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இது பற்றி தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.

இதையும் படியுங்க:

அயோத்தியா வழக்கு கடந்துவந்த பாதை...!

ABOUT THE AUTHOR

...view details