தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் அருகே சாராயம் குடித்த பள்ளி மாணவர்கள் கவலைக்கிடம் - கடலூர் அண்மைச் செய்திகள்

கடலூர் : குள்ளஞ்சாவடி அருகே சாராயம் குடித்த பள்ளி மாணவர்கள் மூவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் அருகே ஊறல் சாராயம் குடித்த பள்ளி மாணவர்கள் கவலைக்கிடம்
கடலூர் அருகே ஊறல் சாராயம் குடித்த பள்ளி மாணவர்கள் கவலைக்கிடம்

By

Published : Jun 4, 2021, 12:17 PM IST

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அன்பரசன், கபிலன், தமிழ் மாறன். இவர்கள் மாலையில் தங்கள் கிராமத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, கரும்புத் தோட்டத்தின் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சாராயம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊறலை எடுத்து போதைக்காக குடித்துள்ளனர். பின்னர் ஒருவர் பின் ஒருவராக மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் மாணவர்களை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்ற மூன்று மாணவர்களும் மேல் சிகிச்சைக்காக, புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புலியூரை சேர்ந்த சாராய வியாபாரி பூபாலனை கைது செய்தனர்.

இதையும் படிங்க : கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details