தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Video:பயணியர் நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு திருமணம் - Today viral videos

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிற்றுந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் ஒருவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பயணியர் நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு திருமணம் - வைரலாகும் வீடியோ
பயணியர் நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு திருமணம் - வைரலாகும் வீடியோ

By

Published : Oct 10, 2022, 11:31 AM IST

Updated : Oct 10, 2022, 12:03 PM IST

கடலூர்மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. இதன் அருகில் பல்வேறு கிராமங்களுக்குச் செல்வதற்கான சிற்றுந்து பேருந்து நிறுத்தம் உள்ளது.

இந்த நிலையில் இதன் நிழற்குடையில் பள்ளிச் சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு, மாணவன் ஒருவர் தாலி கட்டுகிறார். இதில் மாணவி 12ஆம் வகுப்பும், மாணவர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் படித்து வருகின்றனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிதம்பரம் பயணியர் நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு திருமணம்

மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கடும் விமர்சனத்தையும் நகைச்சுவையாகவும் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் இருவரின் பெற்றோர்களிடத்தில் இருந்தும் இதுவரை எந்தவிதப் புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிதம்பரத்தில் தொடரும் குழந்தை திருமணம் - தீட்சிதர் உடன் தாய், தந்தை கைது

Last Updated : Oct 10, 2022, 12:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details