தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடம்: விடுமுறையால் உயிர் சேதம் தவிர்ப்பு! - கனமழையால் இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்

கடலூரில் கனமழையால் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்தது. பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

கனமழையால் இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்
கனமழையால் இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்

By

Published : Nov 18, 2021, 6:35 PM IST

கடலூர்: வானதிரையான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 34 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருவதால் இன்று (நவ.18) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வானதிரையான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம் கனமழையால் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

கனமழையால் இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடம்

பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கனமழையால் நிரம்பிய ஆண்டியப்பனூர் அணையில் நீர் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details