கடலூர் மாவட்டம், நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானா அருகே பத்தாம் வகுப்பு மாணவன் கார்த்தி (15) தன்னுடைய சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்த கார்த்தியின் மீது மோதி, அதே வேகத்தில் அருகே இருந்த மரத்தில் மோதி நின்றது.
பள்ளி வேன் மோதி பத்தாம் வகுப்பு மாணவன் பலி; நெய்வேலியில் சோகம்! - மருத்துவமனை
கடலூர்: சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவன் மீது, தனியார் பள்ளி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார்.
வேன் மோதி மாண்வன் பலி
வேன் மோதியதில் மாணவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெய்வேலி டவுன்ஷிப் காவல் துறையினர், கார்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நெய்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, நெய்வேலி டவுன்ஷிப் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.