தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டில் வேலை; ஏமாற்றிய தம்பதி மீது புகார்! - cheating

கடலூர்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6.55 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தம்பதி புகார் அளித்துள்ளனர்.

தம்பதி மீது புகார்

By

Published : Jun 10, 2019, 9:50 PM IST

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் பெரியார் நகரை சேர்ந்தவர்கள் ராமலிங்கம் - மகேஸ்வரி தம்பதி. இவர்கள் அதேபகுதியை சேர்ந்த சிலரிடம் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய சிலர் தம்பதியிடம் ரூ. 6.55 லட்சம் வரை பணத்தை கொடுத்துள்ளனர்.

பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details