தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர்: வாகன தணிக்கையின்போது பிடிபட்ட ரூ.4,25,000 வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு

கடலூர்: முதுநகர் அருகே வாகன தணிக்கையின்போது பிடிபட்ட நான்கு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடலூர் வாகன தணிக்கை
கடலூர் வாகன தணிக்கை

By

Published : Mar 3, 2021, 6:42 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கிடையே வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் கொடுப்பதைத் தடுக்கும்வகையில் மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என 24 மணிநேரமும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

கடலூர் வாகன தணிக்கை
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர வாகன சோதனை நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் கடலூர் முதுநகர் அருகே பச்சையாங்குப்பம் அருகே பறக்கும் படை வட்டாட்சியர் விஜயா தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது புதுவையிலிருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் நான்கு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால் கடலூர் வட்டாட்சியர் பலராமனிடம் தணிக்கையின்போது பிடிபட்ட நான்கு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details