கடலூர் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்கள், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
ஆட்சியரைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்! - தமிழ்நாடு வருவாய்த்துறை
கடலூர்: மாவட்ட ஆட்சியர், ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் செய்வதைக் கண்டித்து சுமார் 200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், துணை வட்டாட்சியர் நிலையில் ஒருதலைபட்சமாகவும், மாவட்ட நிர்வாகிகள் பழிவாங்கும் நோக்கத்துடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், தேர்தலில் செலவு செய்து நிதி ஒதுக்கீடு பெறாத சூழ்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட தேர்தல் துணை வட்டாட்சியர்களை அதே பணியிடத்தில் மீண்டும் அமர்த்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் முழக்கங்களை எழுப்பினர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.