கடலூர் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது, கடலூர் ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் எடுத்துவரும், ஊழியர் விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். நடைமுறைகளை தொடர்ந்து மீறி வரும் மாவட்ட ஆட்சியர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில், பணி முதுநிலை தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆணைகளை விரைவாக வழங்கிட வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் இளநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிதாசன் என்பவரது இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்து ஆணையிட வேண்டும். வருவாய்த் துறை அலுவலர்களின் நீண்டநாள் கோரிக்கை விரைவில் தீர்வு காண வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு முழுவதுமுள்ள 81 ஆதிதிராவிடர் நலம் தனி வட்டாட்சியர் பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கையினை ஆதிதிராவிடர் நலத்துறை எடுத்து வருவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.