கடலூர் மாவட்டம் ராசாபேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்களான பரமசிவம், ரவி, பஞ்சன் ஆகியோர் கடந்த ஒன்றாம் தேதி மீன்பிடி தொழிலுக்காக கேரளாவுக்குச் சென்றுள்ளனர். கடந்த வாரம் சனிக்கிழமை தங்கள் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசிய மீனவர்கள் தாங்கள் தொழிலுக்குச் சென்றுவிட்டோம் என்று கூறியுள்ளனர்.
கேரளாவுக்கு மீன்பிடி தொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்: ஆட்சியரிடம் உறவினர்கள் கண்ணீர்! - The man who went fishing to Kerala is missing
கடலூர்: மீன்பிடி தொழிலுக்காக கேரளா சென்ற ராசாபேட்டையைச் சேர்ந்த மீனவர், 10 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று அவரின் உறவினர்கள் அவரை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது மனு அளித்தனர்.
இதையடுத்து மறுநாள் பரமசிவம் உடல்நலக் குறைவால் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். இந்நிலையில் செவ்வாய்கிழமை ரவி தனது உறவினர்களுக்குத் தொடர்புகொண்டு, ”நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை, என்னை அடிக்கிறார்கள். என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதனால் பதட்டமடைந்த ரவியின் உறவினர்கள் கேரளா சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அவர்கள் மனு அளித்துவிட்டு கதறி அழுதனர். இதனிடையே பஞ்சனும் இன்று கரை திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஓமன் நாட்டில் காணாமல் போன மீனவர்கள் - உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!