கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை இரண்டின் தண்ணீர் தேவைக்காக செம்மங்குப்பம் ஊராட்சியில் 2000 அடியில் மூன்று ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்பட்டுவருகிறது. இதனால் செம்மங்குப்பம் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை இரண்டில் புதிதாக திறக்கப்படவிருக்கும் சைமா சாயப்பட்டறைக்கு செம்மங்குப்பம் ஊராட்சியில் இருந்து தண்ணீர் எடுத்துச்செல்ல ஆழ்துளை கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.