தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிப்காட் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் கணேசன் - sipcot factory

கடலூர்: சிப்காட் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

சிப்காட் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்
சிப்காட் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்

By

Published : May 13, 2021, 5:23 PM IST

கடலூர் - சிப்காட் பகுதியில் கிரிம்சன் ஆர்கானிக் என்ற தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று(மே 13) காலை கொதிகலனில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதில் பழைய வண்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார், செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கணபதி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த சபிதா, பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த விஷேஸ் ராஜ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்து கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிப்காட் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்

இச்சம்பவம் குறித்து அறிந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தொழிற்சாலைப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு முதலமைச்சரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளதாகவும்; பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிப்காட் தீ விபத்து: உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு!

ABOUT THE AUTHOR

...view details