தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'லட்சியத்தை நோக்கிப் பயணித்தால் நினைத்த இடத்தை அடைய முடியும்'

கடலூர்: பெண்கள் கல்வி கற்கும்போது லட்சியத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினால், நிச்சயம் நினைத்த இடத்தை அடைய முடியும் என ராணிப்பேட்டை உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா தெரிவிக்கிறார்.

ias ishawarya
ஐஸ்வர்யா

By

Published : Apr 20, 2021, 7:01 AM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன் மகள் ஐஸ்வர்யா, தமிழ்நாடு அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 47ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

ஜார்கண்ட்டில் பயிற்சியை மேற்கொண்ட அவர், தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, தனது சொந்த மாவட்டமான கடலூருக்கு வந்த ஐஸ்வர்யா, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா முரியைச் சந்தித்து மரக்கன்றுகளைக் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். இதேபோன்று மாவட்ட ஆட்சியர், அசோக சக்கரம் பொருத்திய உருவத்தை நினைவுப் பரிசாக அவருக்கு வழங்கினார்.

ராணிப்பேட்டை உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா, "பெண்கள் இளமையில் கல்வி கற்கும்போதே தங்கள் லட்சியத்தை நோக்கிப் பயணித்துப் படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

கடினமான முயற்சி எடுத்துப் படித்தால், விரும்பிய துறைகளுக்கு நிச்சயம் அவர்களால் செல்ல முடியும்" எனத் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க:மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு தாய் கண்ணீர்

ABOUT THE AUTHOR

...view details