தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முந்திரி ஆலை கொலை; தாமதிக்காது திமுக எம்பியை கைது செய்- மருத்துவர் ராமதாஸ்! - கடலூர் கொலை

முந்திரி ஆலை கொலை வழக்கில், கடலூர் மக்களவை உறுப்பினரை கைது செய்ய சிறிதும் தாமதிக்கக் கூடாது எனப் பாமக நிறுவனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Cashew plant murder issue  Cashew plant  murder  cuddalore Cashew plant murder issue  cuddalore news  cuddalore latest news  murder  முந்திரி ஆலை கொலை வழக்கு  கொலை வழக்கு  கடலூர் முந்திரி ஆலை கொலை வழக்கு  கடலூர் கொலை  கொலை
ராமதாஸ்

By

Published : Oct 9, 2021, 3:02 PM IST

கடலூர்: முந்திரி ஆலையில் நடைபெற்ற கொலை குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பண்ருட்டி அருகில் உள்ள, கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி கொடூரமான முறையில் அடித்து, கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட வழக்கில், ரமேஷின் உதவியாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு

கோவிந்தராசு கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் விசாரணை இதுவரை ஐயத்திற்கு இடமின்றி சென்று கொண்டிருக்கிறது. வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால், இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியான கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷ் இன்னும் கைது செய்யப்படாதது ஏன் என்பது தான் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. அவர் கைது செய்யப்படுவதில் செய்யப்படும் தாமதம் இவ்வழக்கின் விசாரணையை பாதிக்கும்.

கோவிந்தராசு கொலை தொடர்பாக கடந்த மாதம் 20 ஆம் தேதி கடலூர் எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்த இரு நாள்களில் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அப்போதிலிருந்து அவர் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தில் தான் வைக்கப்பட்டிருந்திருப்பார்.

பதியப்பட்ட வழக்குகள்

அதனால் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. அத்தகைய சூழலில் கொலை வழக்கின் முதன்மை எதிரியான ரமேஷை கைது செய்ய சிபிசிஐடி தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. முதன்மை குற்றவாளியை கைது செய்யாமல், அவரது உதவியாளர்களை மட்டும் கைது செய்வதால் பயனில்லை.

கடலூர் எம்.பி ரமேஷ் செய்த குற்றங்கள் என்னென்ன என்பதை அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரிவுகளே காட்டுகின்றன. தொழிலாளி கோவிந்தராசுவை கடத்திச் சென்று அடைத்து வைத்தல் (இ.த.ச. 341), கொலை (இ.த.ச. 302), வன்முறையை பிரயோகித்தல் (இ.த.ச. 147), குற்றம் செய்யும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக கூடுதல் (இ.த.ச. 149) ஆகியவற்றுடன் கூட்டுச்சதி (இ.த.ச. 120 பி), சாட்சியங்களை அழித்தல் (இ.த.ச. 201) ஆகிய பிரிவுகளில் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிந்தராசு கொல்லப்பட்ட பிறகு அவர் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக குற்றஞ்சாட்டப்படும் ரமேஷ், இனியும் கைது செய்யப்படாமல் இருந்தால் வழக்கின் சாட்சியங்களை அழித்து விடுவார். எனவே, இனியும் தாமதிக்காமல் கடலூர் மக்களவை உறுப்பினரை சி.பி.சி.ஐ.டி உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: இளைஞர்களை பீர் பாட்டிலால் தாக்கிய போதை ஆசாமிகள் - பகீர் சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details