கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக தமிழ்நாடு அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக திகழும் என அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையில், இது அரசுக் கல்லூரி. இங்கு அரசு கட்டணம் தான் வசூலிக்கப்படும். இந்தக் கட்டண குறைப்பு தற்போது கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதனை மருத்துவ கல்லூரி நிர்வாகம் ஏற்காமல், தற்போது கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு உள்ள நிலுவைத் தொகையையும் உடனடியாக செலுத்தினால்தான் தேர்வு முடிவுகளை வெளியிட முடியும் என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், வேதனையடைந்த மாணவர்கள் கடந்த 14 நாள்களாக தொடர் நூதன போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று (மார்ச்13) 15 ஆவது நாளாக கல்லூரி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு தரையில் அமர்ந்து அரசாணை 45ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அரசு கல்லூரி ஆன பிறகு ஏன் கட்டணம் 30 மடங்கு கூடுதலாக வசூலிக்கிறார்கள். ஏன் கல்லூரியை சுகாதார துறையிடம் ஒப்படைக்கவில்லை என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் போராட்டம் மீண்டும் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க:ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்