தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2021, 12:33 AM IST

ETV Bharat / state

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவிகள் செல்போன் ஒளி மூலம் நூதனப் போராட்டம்

கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவிகள் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி செல்போன் ஒளி அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Raja Muthiah
செல்போன் ஒளி மூலம் நூதன போராட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 46 நாள்களாக கல்லூரி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

இதையடுத்து மறுதேதி குறிப்பிடாமல் அக்கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாகவும், விடுதிகளையும் மூடுவதால், அங்கு தங்கியிருந்த மாணவ, மாணவிகள் ஜனவரி 21ஆம் தேதி மாலை 4 மணிக்குள் வெளியேற வேண்டும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. மாணக்கர்கள் மறுத்ததால் விடுதியில் மின்சார வசதியை தடை செய்துள்ளனர். அத்தோடு அத்தியாவசியமான குடிநீர் சேவையையும் நிறுத்தியுள்ளது. விடுதியில் உணவு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

செல்போன் ஒளி மூலம் நூதனப் போராட்டம்

இதையடுத்து, விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி நேற்று (ஜன.23) போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசைக் கண்டித்தும், பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும் செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டு (மொபைல் டார்ச் லைட்) மாணவிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:அதிக கட்டணம் வசூல்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details