கடலூரில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக வேட்பாளர் டிஆர்விஎஸ் ரமேஷுக்கு ஆதரவு தெரிவித்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார். இதில் திமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பாஜகவின் கொத்தடிமைகளாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மாறிவிட்ட காரணமாக, பாஜக கேட்ட இடங்களை எல்லாம் அதிமுக தென் மாவட்டத்தில் ஒதுக்கிக் கொடுத்துள்ளது. அதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சி சொல்வதைக் கேட்டுக்கொண்டு அம்மாவையும், எம்ஜிஆரையும் மறந்து விட்டு இரட்டை இலை சின்னத்தையும், கோடியும் வைத்துகொண்டு கட்சி நடத்தி வருகின்றனர்.