கடலூர்:கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதில் அவ்வப்போது தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இரண்டு மாதத்திற்குப் பின் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி வழங்கப்படவில்லை.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த ஜூலை 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஊரடங்கு அமலில் உள்ளதால் எளிமையான முறையில் திருவிழா பக்தர்கள் இன்றி நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனித் திருமஞ்சன விழா நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுர வாயிலின் எதிரே பக்தர்கள் ஒன்று திரண்டு கோயில் திருவிழா, முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடத்த வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் கோயில் தேரோட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் இந்த முறையும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:மதுரை மீனாட்சி கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் தொடக்கம்