தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் சட்ட அமைச்சர்

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு எதிராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (ஜூலை 27) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 28, 2021, 8:09 AM IST

கடலூர்: விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைத்ததை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப் பற்றி அவதூறாக பேசி விமர்சனம் செய்துள்ளார். இதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிவி சண்முகத்திற்கு எதிராக மனு

பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமையில் நேற்று முக்கிய நிர்வாகிகள், ஊழியர்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஞானதேவனை சந்தித்து சிவி சண்முகத்தின் விமர்சனம், பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் மனு அளித்தனர்.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிவி சண்முகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி, அவர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

100 ஆண்டை நோக்கி பயணிக்கும் பல்கலைக்கழகம்

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் மனோகரன், "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப் பற்றி முன்னாள் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் அவதூறு விமர்சனம் செய்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தின் பட்டியலில் அண்ணாமலை பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது. இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள்தான் காரணம். பல்வேறு அறிஞர்கள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் ஆளுநர் மற்றும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் படித்து பட்டம் பெற்ற பெருமைமிக்க பல்கலைக்கழகம்.

இந்த பல்கலைக்கழகம் 91ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து 100ஆவது ஆண்டை நோக்கி பயணிக்கிறது. பல்கலைக்கழத்தைப் பற்றி அவதூறாக பேசியிருப்பது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும். மாணவர்களின் எதிர்கால நலனையும் பாதிக்கும். அதனால் இதுகுறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஜெ., பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது - பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details