உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, தனியார் உணவகம் ஒன்று மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பாரம்பரிய உணவுப் பொருள்களை இலவசமாக வழங்கிவருகிறது.