தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் தனியார் பேருந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு! - கடலூர்

கடலூரில் தனியார் பேருந்து துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கடலூரில் தனியார் பேருந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி கோர விபத்து - இருவர் பலி!
கடலூரில் தனியார் பேருந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி கோர விபத்து - இருவர் பலி!

By

Published : Jul 8, 2022, 8:20 AM IST

கடலூர்:மாவட்டத்திலிருந்து விருத்தாச்சலத்திற்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தோப்புக்கொள்ளை என்ற பகுதிக்கு அருகே செல்லும்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென சாலையின் குறுக்கே வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் அவர்கள் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பினார்.

ஆனாலும் அந்த இரண்டு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய பேருந்து அருகில் இருந்த துணை மின் நிலையத்தின் டிரான்ஸ்பார்மர் மீதும் மோதியது. இதில் திடீரென பேருந்து தீப்பற்ற தொடங்கியது. உடனே அலறி அடித்து 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். இதற்கிடையில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. அரை மணி நேரத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து விட்டது.

தனியார் பேருந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து

பின்னர் வந்த தீயணைப்பு வீரர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் சபரி என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அப்பு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி விட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்ட நிலையில், தனியார் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆன சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கார்கள் மீது கனரக வாகனம் மோதி விபத்து: குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details