தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் சிறைக் கைதி உயிரிழந்த விவகாரம்: அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு! - tn human rights commission

சென்னை: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி செல்வமுருகன் மரணமடைந்தது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல்செய்ய மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணை பிரிவிற்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மற்றோரு லாக் அப் மரணமா? கடலூர் சிறைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
மற்றோரு லாக் அப் மரணமா? கடலூர் சிறைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

By

Published : Nov 7, 2020, 4:33 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் செல்போன் திருட்டு வழக்கில் நெய்வேலி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். பின்னர், விருதாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி மரணமடைந்தார்.

இதில் நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் அவரை அடித்து சித்ரவதை செய்ததால்தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், செல்வமுருகன் மரணம் தொடர்பாக கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும், தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உத்தரவு
இந்தக் கடிதத்தின் அடிப்படையில், செல்வமுருகன் மரணம் குறித்து விசாரித்து எட்டு வாரங்களில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணை பிரிவு டிஜிபிக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details