தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் விறுவிறுவென உயரும் கரோனா பாதிப்பாளர்கள் எண்ணிக்கை - கடலூரில் விறுவிறுவென எகிரும் கரோனா எண்ணிக்கை

கடலூர்: கடலூரில் நேற்று 47 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,123 ஆக உயர்ந்துள்ளது.

present corona positive cases in cuddalore
present corona positive cases in cuddalore

By

Published : Jul 3, 2020, 7:11 AM IST

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. போர்க்கால அடிப்படையில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி, தகுந்த இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றால் 1,076 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 47 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,123 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 730 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று மேலும் 50 குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமானோர் எண்ணிக்கை 780 ஆக உயர்ந்துள்ளது.

விருத்தாசலத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கடைக்கு கிருமிநாசினி தெளித்து சீல் வைத்தனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் விருதாச்சலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளை சுகாதாரத்துறையினர் மூட உத்தரவிட்டு உள்ளனர். இந்நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். தற்போது கடலூரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க... என்எல்சி வெடிவிபத்து: இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி

ABOUT THE AUTHOR

...view details