கடலூர்:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என் சிதம்பரம் விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெரு, மந்தகரை பகுதிகளில் போஸ்டர் ஒன்று இன்று (நவ.19) ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் 'சத்தியமூர்த்தி பவனா (அ) சண்டை மூர்த்தி பவனா எனவும் ஒற்றுமையாக இருக்கும் அடிமைகளுக்கு தெரியவில்லை. திமுகவுடன் தோழமையாக இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை கெடுத்து வரும் ஊழல்வாதி RSS-ன் கைக்கூலி கே.எஸ்.அழகிரியே ராஜினாமா செய்' என எழுதப்பட்டுள்ளது. இவன் கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.