தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் ரசாயன ஆலை வெடிவிபத்து: ஸ்டாலினிடம் பூவலகின் நண்பர்கள் கோரிக்கை - cuddalore

கடலூர்: சிப்காட்டில் வெடிவிபத்திற்கு உள்ளான ரசாயன ஆலையை போன்று பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் ஆலைகளை ஆய்வு செய்யவேண்டும் என பூவலகின் நண்பர்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் சிப்காட் வெடிவிபத்து, கடலூர், பூவுலகின் நண்பர்கள்
cuddalore sipcot factory fire accident

By

Published : May 13, 2021, 9:42 PM IST

கடலூர் மாவட்டம் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் இன்று (மே 13) காலை பாய்லர் விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரழந்துள்ளனர். மேலும், சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தன்னார்வ சுற்றுச்சுழல் பாதுகாப்பு அமைப்பான பூவலகின் நண்பர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை குறிப்பிட்டு:

"கடந்த மார்ச் மாதம் கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் அங்கு செயல்படும் ஆலைகளால் பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு நடத்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

பூவுலகின் நண்பர்கள் டிவிட்டர்

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு, தாமதிக்காமல் இந்த ஆய்வை நடத்தி உரிய பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." என பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ’முதல் நாளே சித்த மருத்துவத்தை நாடுங்கள், ரெம்டெசிவிருக்காக காத்திருப்பதைத் தவிர்க்கலாம்’

ABOUT THE AUTHOR

...view details