தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாட்டுப் பொங்கல் பண்டிகை: கடலூர் துறைமுகத்தில் மீன் விற்பனை அமோகம்!

கடலூர்: மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் துறைமுகத்தில் மீன் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

pongal-festival-cuddalore-port-sells-fish
pongal-festival-cuddalore-port-sells-fish

By

Published : Jan 15, 2021, 2:08 PM IST

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான இன்று (ஜன.15) மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மாட்டுப் பொங்கல் பண்டிகையில் பெரும்பாலான மக்கள் கடல் சார்ந்த உணவு பொருட்கள் சமைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள். இதனால் மீன் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் அதிகாலையிலிருந்து மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் இன்று கடலூர் துறை முகத்தில் வஞ்சரம் மீன் கிலோ 550 ரூபாய்க்கும்,சங்கரா மீன் 250 ரூபாய்க்கும், நண்டு கிலோ 200 ரூபாய்க்கும், இறால் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடலூர் துறைமுகத்தில் மீன் விற்பனை அமோகம்

கடலூர் துறைமுகத்தில் பொங்கல் பண்டிகையன்று மீன்கள் அதிகளவு விற்பனையானதால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 5 ரூபாய் சாப்பாடு: பசியாற்றுவதை விட வேறு கொடை உண்டா?

ABOUT THE AUTHOR

...view details