தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் சிலைக்கு மாலையிட்டதால் காவலர்கள் இடமாற்றம் - அதிர்ச்சி

கடலூர்: தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதால் மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police
police

By

Published : Oct 8, 2020, 2:51 PM IST

கடந்த மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று, அண்ணா பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு புதுநகர் காவல் நிலைய காவலர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய 3 பேர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அப்புகைப்படங்களை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றினர்.

இந்நிலையில், ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய 3 பேரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தரப்பில் கேட்டபோது, புதுநகர் காவல் நிலைய காவலர்கள் மூன்று பேரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றும், நிர்வாகப் பணி காரணமாகவே மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இருப்பினும், இவர்கள் மூன்று பேரை மட்டும் இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்வாக தேவை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள புதுநகர் பகுதி மக்கள், தமிழ்நாட்டின் தந்தை எனப் போற்றப்படும் பெரியார் சிலைக்கு முதலமைச்சர் முதல் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்போது காவலர்கள் மரியாதை செலுத்தியதில் என்ன தவறு என்றும் வினவியுள்ளனர்.

எனவே, காவலர்கள் இடமாற்ற உத்தரவை திரும்பப் பெறுவதுடன், இதுபோன்ற செயலில் இனியொரு முறை மாவட்ட காவல்துறை ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தொல்லியல் துறையில் தமிழ் புறக்கணிப்பு - அவசர வழக்காக நாளை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details