தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாள சாக்கடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு - பண்ருட்டியில் ஆண் சடலம் மீட்பு

கடலூர்: பாதாள சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Police recovered body
அடையாள தெரியாத ஆண் சடலத்தை மீட்ட காவல்துறையினர்

By

Published : Jun 30, 2020, 3:34 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரத்துக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி பகுதியிலுள்ள பாதாள சாக்கடையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாபுபிரசாத் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதாள சாக்கடையின் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சடலத்தை மீட்பதற்காக மருத்துவ உதவியாளர் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே அவர்கள் வருவதற்குள் பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கர், தானாக முன்வந்து கயிறு கட்டி காவலர்கள் உதவியுடன் சடலத்தை சாக்கடையிலிருந்து மேலே இழுத்தார். அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

சடலத்தை கயிறு கட்டி மீட்கும் ஆய்வாளர்

மேலும் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வெற்றி பெற்றவரை தோற்றதாக அறிவித்த தேர்தல் அலுவலர்கள் - ஆர்டிஐ தகவலில் வெளிவந்த உண்மை!

ABOUT THE AUTHOR

...view details