கரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட விழிப்புணர்வுகளும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்: தோப்புகரணம் போட வைத்த போலீஸ் ஆனால், இதையும் மீறி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 12 இளைஞர்களை பிடித்த காவல்துறையினர், 'கரோனா உயிருக்கு ஆபத்து', 'பாதுகாப்பாக இருப்போம்', 'வீட்டை விட்டு வெளியேற மாட்டோம்' என உறுதி எடுத்தபடியே தோப்புக்கரணம் போட வைத்தனர்.
இதையும் படிங்க:கட்டடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்