கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன், பாக்கியலட்சுமி தம்பதி. இவர்களுக்கு நேற்று முன்தினம் (பிப். 13) பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் அங்கு வந்த பெண் ஒருவர் யாருக்கும் தெரியாமல், குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
குழந்தை காணாமல்போனது தெரிந்த பெற்றோர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் குழந்தையை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தை இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான காவல் துறையினர், புதுச்சேரிக்குச் சென்று குழந்தையை மீட்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடலூரில் காணாமல்போன குழந்தை புதுச்சேரியில் மீட்பு தற்போது குழந்தையை கடத்திய பெண் யார், எதற்காக கடத்தினார்கள்? போன்று கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை!