தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவருக்கு 11 ஆண்டு சிறை - சிறுமியை பாலியல் வன்புனர்வு

கடலூர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

pocso court
pocso court

By

Published : Feb 5, 2020, 7:15 AM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரி என்பவரின் மகன் ராமச்சந்திரன் (65).

இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமச்சந்திரனை கைது செய்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அதன் தீர்ப்பை நீதிபதி கருணாநிதி நேற்று அறிவித்தார்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: 'சிறுமி வன்படுகொலை: உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கிறதா காவல்துறை?' - மாதர் சங்கம்

ABOUT THE AUTHOR

...view details