கடலூர்: நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகனை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று (மார்ச்.22) சத்திரம் பகுதியிலும், முத்தாண்டிகுப்பம் பகுதியிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில் பேசியபோது,
'தமிழ்நாடு அரசு தற்போது தங்களுடைய யோசனைகளையும் அவற்றோடு சேர்த்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளனர். இதில் வீட்டுக்கு ஆறு சிலிண்டர்கள், குடும்பத் தலைவிக்கு 1,500 ரூபாய், வாஷிங் மெஷின் போன்ற திட்டங்கள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடனே வழங்கப்படும். எதிர்க்கட்சித் தலைவராக செயல்படும் தகுதிகூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுப்பதற்கு கையெழுத்திட்டவர் ஸ்டாலின் தான். அதனை மீட்டுத்தர பாதுகாப்பு மண்டலம் அமைத்து தரப்படும் உள்ளிட்ட பத்து கட்டளைகளை ஏற்றுதான் பாமக, தற்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதனடிப்படையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது” என்றார்.